1. Home
  2. தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்!

Q

விடுமுறை நாட்களிலும் பொதுமக்களின் வசதிக்காக, அவர்களின் தேவைகளின் அடிப்படையில் தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. மாலை 6 மணிக்கு மேலும் இயங்கும் ஒரே அரசு அலுவலகமாக பத்திரப்பதிவு அலுவலகம் இருந்து வருகிறது. அந்த வகையில் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் மாசி மாதத்தின் சுப முகூர்த்த நாளான மார்ச் 10ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் பதிவுத் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கமான ஒன்று தான்.  
தற்போது மாசி மாதத்தின் மங்களகரமான தினமான 10.03.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யும்படி பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. 
இதனை ஏற்று மாசி மாதத்தின் சுபமுகூர்த்த தினமான 10.03.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Trending News

Latest News

You May Like