1. Home
  2. தமிழ்நாடு

5000க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு அசைவ விருந்து..!

1

 குல தெய்வ வழிபாட்டிற்காக அதிலும் ஆடிமாதங்களில் கொண்ட்டாடப்படும் வழிபாடுகள் மிகவும் சிறப்பாக வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

திருவிழாக்கள் கொண்டாடப்படுவதும் நேர்த்திக்கடன்களை செலுத்த பக்தர்கள் பல்வேறு வகையில் தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருவர். தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது, தீ மிதித்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் எனப் பல்வேறு வகையில் நேர்த்திக்கடன்களை பக்தர்கள் தங்களது குல தெய்வங்களுக்குச் செலுத்தி வருகின்றனர்,

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே ரோட்டுப்புதூர் விலங்கு கருப்பண்ணசாமி கோவிலில் சுற்றியுள்ள 18 பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் கடவூர் செல்லும் சாலையில் உள்ளதால் அப்பகுதி கிராம மக்கள் தங்களது கால்நடைகள் நன்றாக வளர வேண்டும் என்றும். ஆடு, கோழி போன்ற கால்நடை உயிரினங்கள் நல்ல விலையில் விற்பனை செய்து லாபம் பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு செல்கின்றனர்.

இந்தக் கோவிலில் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஆடி மாதத் திருவிழாவில் ஆடு கோழிகளைப் பலியிட்டுப் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழாவில் 1250 கிலோ அரிசி படையலிட்டு நூறு ஆடுகள் 150 நாட்டுக் கோழிகள் பலியிட்டு அதிகாலை 6 மணி முதலே அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொங்கல் விழா அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தத் திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 5000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விலங்கு கருப்பணசாமி கோவிலில் வழிபாடு நடத்தி அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்டனர். அசைவ அன்னதானம் ஆனது மதியம் முதல் மாலைவரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ரோட்டுப்புதூர் கிராமத்தினர் மற்றும் கோயில் நிர்வாகிகள் மற்றும் அன்னதான குழுவினர் செய்திருந்தனர்

Trending News

Latest News

You May Like