தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீடிப்பு ?
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் இம்மாதம் 30ம் தேதி வரை ஊரடங்கு 5 கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு நீடித்தாலும், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதியதால் தலைநகர் சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சத்துக்கு போனது. இதையடுத்து, 4 மாவட்டங்களிலும் வரும் 30 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தொடர் பாதிப்பால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கடந்த 24ம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் , தற்போது மருத்துவ நிபுணர் குழுவுடன் அவர் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
வரும் 29ம் தேதி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது பற்றிய முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Newstm.in