1. Home
  2. தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழலை விட 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் அதிகம் – அண்ணாமலை..!

1

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் பேசியதாவது,

,தமிழகத்திற்கு 100 நாள் வேலைக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.39,333 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தை விட அதிக மக்கள் தொகை உள்ள உ.பி-க்கு ரூ.38,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழலை விட, 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் அதிகம் நடைபெற்றுள்ளதாகவும் கூறினார்.

போலி கணக்கு எழுதுவது குறித்து ஆடிட் செய்தால் திமுகவினர் சிக்குவார்கள் என்றும், ஊழல் செய்தவர்களை அடைக்க திகார் ஜெயில் போல் நான்கு ஜெயிலை கட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசின் “நமஸ்தே” திட்டத்தில் செல்வப்பெருந்தகை முறைகேடு செய்ததற்கான ஆதாரம் உள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

Trending News

Latest News

You May Like