1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம்..!

1

விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்புகள் என்பதை அறிந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை தொடர்ந்து செய்து தான் வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் கூட விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்காக பல முக்கிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள திட்டங்களை விரிவுபடுத்துதல் என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இந்த தகவலில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் படி கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலம் ஊக்கத்தொகைகள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கரும்பின் ஆதரவு இதற்கு முன்னர் ரூபாய் 315 ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த அறிவிப்பு மூலம் கரும்பின் ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு 340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 215 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசின் 340 மற்றும் தமிழக அரசின் ஊக்கத்தொகை 215 ஆகியவை வரவு வைக்கப்படும். இந்த தகவல் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like