1. Home
  2. தமிழ்நாடு

பணம் உங்க வீடு தேடி வரும்...இனி வங்கிக்கோ, ATM-க்கோ போக தேவையில்லை...!

1

 வங்கி அல்லது ஏடிஎம் மையங்களுக்கு செல்லாம் வீட்டில் இருந்தபடியே ஆதார் கார்டு மூலம் பணத்தை எடுக்க முடியும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? 

முன்பு ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், கடை கடையாக ஏறி இறங்கி வாங்க வேண்டும். ஆனால், இப்போது வீட்டில் இருந்தபடியே, நமக்கு தேவைப்பட்ட பொருட்களை வர வைக்கிறோம் அல்லவா, அதேபோல், நமது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க, மினி ஏடிஎம் மையத்தை வீட்டிற்கே வரவழைக்கும் முறை அறிமுகம் ஆகியுள்ளது. இதற்கு உங்களிடம் ஏடிஎம் கார்டு, பின் நம்பர் அல்லது ஓடிபி என எதுவும் தேவையில்லை.

இப்படியொரு சேவை இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அரசு மக்கள் நலனுக்காகப் பல சிறப்புத் திட்டங்களை உருவாக்கினாலும் அது மக்களிடையே செல்லாமல் இருக்கிறது, இதில் முக்கியமான ஒன்று தான் இந்த ஆன்லைன் ஆதார் ஏடிஎம் (AePS) சேவை. இச்சேவையைப் பயன்படுத்தி உங்கள் வீட்டிலிருந்தே பணத்தைப் பெறலாம்.

ஆதார் இயக்கப்பட்ட பணம் செலுத்தும் முறை (Aadhaar Enabled Payment System - AePS) என்பது ஒரு தனிநபர் தனது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்கிலிருந்து Biometric தரவுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுக்க அல்லது பணம் செலுத்தும் வசதியாகும். வாடிக்கையாளர்கள் ஏடிஎம் அல்லது வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, ஏஇபிஎஸ் மூலம் குறைந்த அளவிலான பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டும் அல்லாமல் ஏடிஎம் இல்லாத இடத்தில் மக்களுக்கு ரொக்க பண தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
 

இந்த சேவையை எப்படி பெறுவது? ஆதார் ஏடிஎம் சேவை பெற வேண்டுமானால், உங்களது வங்கி கணக்கு இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதை ஐபிபிபி (IPPB) இணைய தளத்தை அணுகி செய்து கொள்ளலாம். அதேபோல ஆதார் கார்டு, வங்கி கணக்கு மற்றும் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் பணம் வழங்கப்படுகிறது. ஆகவே, வீட்டில் இருந்து பணத்தை பெறும் போது பயோமெட்ரிக் சரிபார்ப்பு (Biometric Verification) இருக்கும். ஆகவே, நீங்கள் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் ஆதார் சேவைக்கு விண்ணப்பித்து இணைய தளம் மூலமே ஆதார் ஏடிஎம் சேவையை பெற்று கொள்ளலாம். இந்த சேவை மூலமாக அதிகபட்சமாக ரூ.10000 எடுத்து கொள்ள என்பிசிஐ (NPCI) அனுமதி வழங்கி இருக்கிறது.

Trending News

Latest News

You May Like