எமனாக மாறிய பணம்… பெண் பல் மருத்துவர் கொடூர கொலை!

கணவனை பிரிந்து வாழ்ந்த பெண் பல் மருத்துவர் ஒருவர் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த பல் மருத்துவர் சோனா(30)கணவரை பிரிந்து குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இவர் தனது மருத்துவமனையை மறுவடிவமைப்பு செய்யும் போது கட்டுமானத் துறையில் பணிபுரியும் மகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் 2 ஆண்டுகள் லிவிங் டு கெதரில் இருந்தனர். மருத்துவமனையின் மறுவடிவமைப்பு வேலையை முடிக்க, ரூ.7 லட்சம் பேசியிருந்த நிலையில், ரூ.22 லட்சம் பணத்தை மகேஷ் வாங்கியதாக தெரிகிறது. இதனால் இருவருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.
இதனையடுத்து சோனா மகேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து சோனாவின் தந்தை ஜோஸ் இருவரையும் வைத்து பேசியிருக்கிறார். ஆனால் பேச்சுவார்த்தை தகராறில் முடிந்தது.
அதனைத் தொடர்ந்து சோனாவின் மருத்துமனைக்கு சென்ற மகேஷ் அவரை அங்கு வரும்படி அழைத்துள்ளார். அங்கு சென்ற சோனாவை மகேஷ் குத்தி கொலை செய்தார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மகேஷ் தடுத்து நிறுத்தனர். ஆனால் தான் போலீஸில் சரணடைய உள்ளதாக கூறி புறப்பட்ட மகேஷ் பின்னர் தலைமறைவானார். அவரை தீவிரமாக தேடிய போலீஸார் மகேஷ் கைது செய்தனர்.
newstm.in