1. Home
  2. தமிழ்நாடு

மிஸ்யூ அம்மா அப்பா..! உயிரை பறித்த ஆன்லைன் லோன் ஆப்..!

1

சென்னை புதுப்பேட்டை நாகப்பன் தெருவை சேர்ந்த மணி - தனலட்சுமி தம்பதியரின் மகன் கோபிநாத்.  பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு எழும்பூரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் கோபிநாத் பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் இன்று காலை 8:00 மணியளவில் கோபிநாத் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோபிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோபிநாத்தின் செல்போனை ஆய்வு செய்ததில் இறப்பதற்கு முன்பதாக முன்னதாக கோபிநாத் மிஸ்யூ அம்மா அப்பா நான் போகிறேன் quickcash app கடன் வாங்கியதால் தனது புகைப்படத்தை எல்லோருக்கும் அனுப்பியதால் தற்கொலை செய்து கொள்வது போவதாக ஸ்டேட்டஸ் வைத்திருந்தது தெரியவந்தது . 

r

இது தொடர்பாக காவல்துறையினர் இறந்த கோபிநாத்தின் பெற்றோரிடம் விசாரித்த போது தனது மகன் ஆன்லைன் லோன் ஆப்பில் கடன் வாங்கிவிட்டு பணத்தை செலுத்திய பின்பும் மீண்டும் மீண்டும் தொகை கேட்டு மிரட்டினர்.  தனது மகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவனது செல்போன் தொடர்பில் உள்ள அலுவலக ஊழியர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர்.  இதை பார்த்து தனது மானம் போய்விட்டதாக கோபிநாத் அழுததாக அவரது தாய் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.   இறந்த கோபிநாத் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பதாக குவிக் கேஷ் ஆப் என்ற செயலி மூலமாக 40 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார்.  வாங்கிய கடனை செலுத்திய பின்பும் மீண்டும் மீண்டும் லோன் ஆப் நிறுவனம் வட்டி கேட்டு தொல்லை செய்து வந்துள்ளது. படத்தை ஆபாசமாக சித்தரித்து செல்போனில் உள்ள கோபிநாத்தின் காண்டக்ட்டில்  இருப்பவருக்கு அனுப்பி விடுவதாக வட மாநில நபர் ஒருவர் மெசேஜ் மற்றும் செல்போன் மூலமாக தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்துள்ளார்.

 கோபிநாத்தின் தாய் தங்க நகையை அடகு வைத்து கடன் செலுத்த கொடுத்துள்ளார். 40 ஆயிரம் கடனுக்கு 40 ஆயிரம் ரூபாய் கடனுக்காக சுமார் ஒன்றரை லட்சம் வரை கோபிநாத் திருப்பி செலுத்தியுள்ளார்.  மீண்டும் மீண்டும் பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் கோபிநாத் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் மனம் வெறுத்துப் போன அவர்  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோபிநாத் செல்போனை தடவியல் துறைக்கு அனுப்பிய போலீசார் மிரட்டல் விடுத்த எண்ணை வைத்து வட மாநில நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like