முருகன் கோயிலுக்கு வேல் வழங்கிய நடிகர் மோகன்லால்..!

துடரும் படத்தின் வெற்றிக்கு காணிக்கையாக முருகனுக்கு தங்கவேல் வழங்கிய நடிகர் மோகன் லால்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள திருமலை குமாரசாமி கோயிலில், 'துடரும்' திரைப்படத்தின் வெற்றிக்கு காணிக்கையாக முருகனுக்கு தங்கவேல் ஒன்றை வழங்கினார் நடிகர் மோகன் லால்.
துடரும் படத்தில் வரும் கொண்டாட்டம் பாடலில் ஒரு முக்கிய வரியாக திருமலை முருகனுக்கு அரோகரா என்ற வரி இடம் பெற்றுள்ளது.
அந்தப் பாடலின் வெற்றியினைத் தொடர்ந்து இந்த தங்க வேலை காணிக்கையாக கொடுத்துள்ளார்.