1. Home
  2. தமிழ்நாடு

இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு மோகன்ஜி பதிலடி..! என்னங்கடா இது. சினிமா டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க..!!

1

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி ஒன்றினை நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இயக்குநர் பா. ரஞ்சித் கலந்து கொண்டார்.

இதில் பேசிய  பா.ரஞ்சித் ஆளும் திமுக அரசின் மீதும் திமுகவில் இருக்கக்கூடிய தலித் எம்.பி, எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், மேயர்கள் மீது காட்டமாக விமர்சனங்கள் வைத்தார். மேலும்  சென்னையைக் கட்டி ஆண்ட தலைவருக்கு சென்னைக்கு வெளியே புதைக்க இடம் கொடுக்கீன்றீர்கள். இதுதான் உங்களின் சமூக நீதியா? திமுக அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். சென்னையில் ஆம்ஸ்ட்ராங் அண்ணனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்.

 
ஆம்ஸ்ட்ராங் அண்ணன் கொல்லப்பட்ட பின்னர், முதலில் பாஜகவினர் இணையத்தில் ஆம்ஸ்டாங் அண்ணனை ரௌடி என எழுகிறார்கள். அதன் பின்னர் ஒட்டுமொத்த திமுகவின் ஐ.டி. விங்கும் இணையத்தில் ஆம்ஸ்ட்ராங் அண்ணனை ரௌடி என எழுதுகின்றார்கள். அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பினால் அவர்களை ரவுடிகள் என்பீர்கள் என்றால் நாங்கள் அனைவரும் ரௌடிகள்தான்’ என்று பேசினார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைத்தளத்தில், ‘என்னங்கடா இது. சினிமால வர்ற டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க.. எப்ப பார்த்தாலும் ரவுடி நாங்க தான், பத்து கேஸ் வாங்க போறது நாங்க தான், மெட்ராஸ் நாங்க தான்னு கூவுறீங்க.. நாங்க எல்லாம் யாருதான்டா அப்ப சென்னையில.. அடுத்தவன் வரலாற சினிமால மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேற.. என்று கூறியுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like