1. Home
  2. தமிழ்நாடு

முகமது சிராஜ் டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் இதுவரை இல்லாத உச்சத்திற்கு முன்னேற்றம்..!

1

 இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் சிராஜ். இந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாளன்று தனது துல்லிய பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார்.5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மொத்தம் 23 விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றினார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர் ஆனார். தற்போது 674 ரேட்டிங் உடன் டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் 15-வது இடத்தை சிராஜ் பிடித்துள்ளார். இந்திய வீரர் பும்ரா இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய பவுலரான பிரசித் கிருஷ்ணா 25 இடங்கள் முன்னேறி இந்த பட்டியலில் 59-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை

1. ஜஸ்ப்ரீத் பும்ரா - 889 புள்ளிகள்

2. ககிசோ ரபாடா - 851 புள்ளிகள்

3. பாட் கம்மின்ஸ் - 838 புள்ளிகள்

4. மாட் ஹென்றி - 817 புள்ளிகள்

5. ஜோஷ் ஹேசில்வுட் - 815 புள்ளிகள்

6. நோமன் அலி - 806 புள்ளிகள்

7. ஸ்காட் போலண்ட் - 784 புள்ளிகள்

8. நாதன் லயன் - 769 புள்ளிகள்

9. மார்கோ யான்சென் - 767 புள்ளிகள்

10. மிட்செல் ஸ்டார் - 766 புள்ளிகள்

(கஸ் அட்கின்ஸன் - 766 புள்ளிகள்)

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5-வது இடத்திலும், ரிஷப் பந்த் 8-வது இடத்திலும் கேப்டன் ஷுப்மன் கில் 13-வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் உள்ளனர்.

Trending News

Latest News

You May Like