1. Home
  2. தமிழ்நாடு

மோடி - ஜெலன்ஸ்கி புகைப்படம் வைரல்..!

1

முதல் முறையாக உக்ரைன் சென்ற பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியுடன் ஜெலன்ஸ்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அவற்றை தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில், 'இந்தியா-உக்ரைன் இடையேயான உறவுகள் மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவதற்கு எங்கள் சந்திப்பு முக்கியமானது' என குறிப்பிட்டு இருந்தார். ஜெலன்ஸ்கியின் இந்த பதிவு சில மணி நேரங்களில் 15 லட்சத்துக்கு மேற்பட்ட 'லைக்ஸ்'களை பெற்றது. இது அவரது சமூக வலைத்தள பதிவுகளில் சாதனையாக மாறியது.

இதற்கு முன் 7.8 லட்சம் 'லைக்ஸ்'களை பெற்றதே அவரது அதிகபட்சமாக இருந்தது. தற்போது மோடியுடனான புகைப்படம் அதை முறியடித்து இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் அதிக பின்தொடர்பாளர்களை கொண்ட உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதே இதற்கு காரணம் ஆகும் என்று கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like