மதுரையில் ‘மோடி பொங்கல்’.. வரும் 12ம் தேதி வருகிறார் மோடி..!

மதுரையில் பாஜக சார்பில் ஜன. 12ம் தேதி நடைபெறும் பொங்கல் திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக பாஜக சார்பில் ‛மோடி பொங்கல்' நிகழ்ச்சி வரும் ஜனவரி 12ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.
மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் நடத்தப்பட உள்ள இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் நடத்துவதற்கு மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது” என அதில் கூறியுள்ளார்.