1. Home
  2. தமிழ்நாடு

ரூ.3,500 கோடி மதிப்புடைய திட்டத்தை தொடங்கி வைத்த மோடி!

ரூ.3,500 கோடி மதிப்புடைய திட்டத்தை தொடங்கி வைத்த மோடி!


குஜராத் மாநிலம் வளர்ச்சி பெறும் வகையில், வேளாண்மை மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.

குஜராத் மாநில விவசாயிகள் பயன் பெறும் வகையில் கிசான் சூர்யோதயா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் மூலம் பகல் மற்றும் இரவு ஆகிய இரண்டு நேரங்களிலும் மின்சாரம் பெற முடியும்.

இந்த திட்டத்தின்படி விவசாயிகளுக்கு காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும். ரூ.3,500 கோடி மதிப்புடைய இந்த மாபெரும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்தார்.

அப்போது, குஜராத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ரோப் கார் திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். 2.3 கிலோமீட்டர் தூரத்திற்கான ரோப் கார் மூலம் மலைக்காட்சியின் அழகிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிக்க முடியும். ஆரம்பத்தில் ஒரு பெட்டியில் எட்டு நபர்கள் பயணம் செய்யும் வகையில் 25 முதல் 30 பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அகமதாபாத்திலுள்ள ஐ.நாவின் மேத்தா இருதவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்திலுள்ள குழந்தைகள் இருதய மருத்துவமனையை மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Trending News

Latest News

You May Like