1. Home
  2. தமிழ்நாடு

மோடி - இளையராஜா திடீர் சந்திப்பு!

Q

தனது இசையால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலக ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.

திரைத்துறையில் தனது நீண்ட பயணத்தில் காதல், கண்ணீர், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் பொருந்தும் வகையில் தனித்தனியே இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து அனைத்து மொழி ரசிகர்களின் இதயங்களையும் வென்றுள்ளார்.

இந்நிலையில்,  பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துள்ளார்.

இது குறித்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. நாங்கள் சிம்பொனி வேலியண்ட் உள்பட பல விஷயங்கள் குறித்துப் பேசினோம்.

அவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நான் தலைவணங்குகிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like