1. Home
  2. தமிழ்நாடு

வந்தாச்சு மோடி இட்லி உணவகம்..!ரூ.10-க்கு 3 இட்லியும், ஐந்து ரூபாய்க்கு ஒரு வடை !

Q

 ‘மோடி இட்லி’ உணவகத்தை தென் சென்னை மாவட்ட பாஜக பொருளாளர் கே.பி.நாகராஜன் ஒத்துழைப்புடன், மண்டலத் தலைவர் ஜி.கோபிநாதன் நடத்தி வருகிறார்.
இங்கு ரூ.10-க்கு 3 இட்லியும், ஐந்து ரூபாய்க்கு ஒரு வடையும் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் வேலைக்கு செல்வோர், தொழிலாளிகள், சாலையோரம் வசிப்பவர்கள் ‘மோடி இட்லி’ உணவகத்தில் சாப்பிட்டுச் செல்கின்றனர். வாரத்தில், சனி, ஞாயிறு தவிர்த்து 5 நாட்கள் செயல்படும் இந்த உணவகம் மூலம், 10-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் பாஜகவினர் வழங்கி வருகிறார்கள். காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே இங்கு இட்லி விற்பனை செய்யப்படுகிறது.
இது தொடர்பாக ‘மோடி இட்லி’ உணவகத்தை நடத்தி வரும் தென் சென்னை மாவட்ட பாஜக மண்டலத் தலைவர் ஜி.கோபி நாதன் கூறியதாவது: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘மோடி இட்லி’ உணவகத்தைத் தொடங்கினோம். ஒரு நாளைக்கு பார்சல் உள்பட 80 பேர் சாப்பிடும் அளவுக்கு தயாரிக்கிறோம். சுமார் 280 இட்லி வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் லாபம் எல்லாம் கிடையாது. மன நிறைவு மட்டும் தான். ஆரம்பத்தில் இங்கு யாரும் சாப்பிட வர மாட்டார்கள். நிறைய நாட்கள் இட்லி வீணாகி இருக்கிறது. பிறகு ஒவ்வொரு தவறையும் சரி செய்யத் தொடங்கினோம். இப்போது, இட்லி மளமளவென விற்பனையாகி விடுகிறது. விரைவில், விருகம்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ‘மோடி இட்லி’ உணவகத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like