1. Home
  2. தமிழ்நாடு

அமித்ஷாவுக்கு ஆதரவாக களமிறங்கிய மோடி..!

1

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், “தாங்கள் இத்தனை ஆண்டுகளாக செய்த தவறுகளை குறிப்பாக டாக்டர் அம்பேத்கரை அவமதித்த செயல்களை தீங்கிழைக்கும் பொய்கள் மூலம் மறைக்க முடியும் என்று காங்கிரஸும் அதன் அழுகிப்போன சுற்றுச்சூழலும் நம்புமானால், அவர்கள் தவறிழைக்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், பட்டியல் மற்றும் பழங்குடி சமூகத்தினை அவமதிக்கவும் பரம்பரியமாக ஒரு குடும்பத்தால் வழிநடத்தப்படும் கட்சியொன்று ஆண்டாண்டு காலமாக எப்படி நடந்து கொண்டது என்பதை இந்திய மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அம்பேத்கரை ஒரு முறை அல்ல இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தது, அவருக்கு எதிராக பண்டித நேரு பிரச்சாரம் செய்தது, அவரின் இழப்பை தன்மான பிரச்சனையாக்கியது, அவருக்கு பாரத ரத்னா தர மறுத்தது, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவரது உருவப்படத்துக்கு பெருமைக்குரிய இடத்தை வழங்க மறுத்தது போன்றவை காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு எதிராக செய்திருக்கும் பாவங்களின் பட்டியல்.

காங்கிரஸ் கட்சி அவர்கள் விரும்பியபடி செயல்படலாம், ஆனால் அவர்களின் ஆட்சி காலத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்துக்கு எதிராக நடந்த படுகொலைகளை அவர்களால் மறைக்க முடியாது. நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, பட்டியல் மற்றும் பழங்குடி சமூகங்கள் அதிகாரம் பெறுவதற்கு எதையும் செய்யவில்லை” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like