விவசாயிகளின் எதிர்காலத்தை மோடி அழித்துவிட்டார்! ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

இந்த நாட்டின் விவசாயிகளின் எதிர்காலத்தை பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சிதைத்துவிட்டதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் மாநிலம் நவாடாவில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைற்றது. அப்போது, பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கொரோனா ஊரடங்கு உத்தரவு நேரத்தின் போது வெளி பீகார் மக்கள் பலர் வெளி மாநிலங்களில் பணியாற்றி வந்தனர். அவர்கள் அந்த மாநிலத்தை விட்டு சொந்த மாநிலம் திரும்பும்போது அவர்களுக்கு பிரதமர் மோடி உதவ முன்வரவில்லை. பிற மாநிலங்களில் இருந்து பசியோடும் பட்டினியோடும் தான் சாலைகளில் நடந்தே வந்தனர். மக்களின் சாபம் மோடி அரசை சும்மா விடாது.
பீகார் மாநிலத்தில் தான் முதலில் மண்டிகளை மத்திய அரசு ஒழித்தது. குறைந்தபட்ச விலை என்பதையே கேலிக்குலியதாக்கினார்கள். தற்போது அதை நாடு முழுக்க அமல்படுத்தி உள்ளனர்.
பிரதமர் மோடி அரசு கொண்டு வந்துள்ள இந்த 3 விவசாய சட்டங்களும், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தையே பாதித்துவிட்டது. மோடியின் அனைத்து செயலுக்கும் உடந்தையாக நிதிஷ்குமார் இருந்து வருகிறார். எனவே, மக்களுக்கு எதிரானவர்களுக்கு நீங்கள் என்ன கொடுக்க வேண்டும் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.
மேலும், ரயில்வே துறை மற்றும் சுரங்கத்துறையை மத்திய அரசு தனியார்மயமாக்கியது. இதனால் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். மோடி அரசு மக்களுக்கு எதிரான அரசு. இப்போது அதை மக்கள் உணர்ந்துள்ளார்கள் என தெரிவித்தார்.