1. Home
  2. தமிழ்நாடு

ரூ.2290 கோடிக்கு நவீன ஆயுதங்கள்! பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா பரிசீலனை!

ரூ.2290 கோடிக்கு நவீன ஆயுதங்கள்! பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா பரிசீலனை!


இந்தியா சீனா எல்லைப் பகுதிகளில் சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட மோதல் காரணமாக இருநாடுகளும் படைகளை குவித்து வருகின்றன. ஆனாலும் சீனாவின் ஊடுருவல் குறையவில்லை என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதனால் பாதுகாப்பை பலப்படுத்தவும், உறுதிசெய்யவும் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான முடிவுகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. முதல் கட்டமாக ரூ.2290 கோடி மதிப்பிலான நவீன ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக .

இந்திய கடற்படை மற்றும் விமானப்படைக்கு ரூ.970 கோடியில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் வாங்கவும், ராணுவத்திற்கு ரூ.780 கோடியில் 72 ஆயிரம் சிக் சாயர் தானியங்கி துப்பாக்கிகளை வாங்கவும், ரூ.540 கோடிக்கு நிலையான எச்.எப். ட்ரான்ஸ் ரிசீவர் கருவிகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like