நாளை முதல் தோ்தல் நடத்தை விதிகள் வாபஸ்..!

பாராளுமன்ற தோ்தல் தேதி, மாா்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருந்தன. மத்திய, மாநில அரசுகள் புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிடவோ, அரசு சாா்பில் நிகழ்ச்சிகளை நடத்தவோ தடை விதிக்கப் பட்டிருந்தது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, அரசியல் கட்சிகளிடம் இருந்து தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு புகாா்கள் எதுவும் வரவில்லை.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றது. ஏதும் பிரச்சினை நடந்ததாக எனக்கு தகவல் வரவில்லை. மக்களவைத் தோ்தல் முடிவு களை இந்திய தலைமை தோ்தல் ஆணையா், டெல்லியில் ஜனாதிபதியிடம் வழங்குவாா். அதன் பின்னா் மத்தியில் புதிய அரசு ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கும்.
தோ்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ம் தேதி(நேற்று) வரை அமலில் இருக்கும். பின்னா் அது திரும்பப் பெறப்படும் .இவ்வாறு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.