1. Home
  2. தமிழ்நாடு

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி..! மாலை 6 மணிக்கு மேல் பணம் எடுத்துச் செல்ல தடை..!

1

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் துவக்கம் மார்ச் 20 ஆம் தேதி, அதாவது வரும் புதன்கிழமை தொடங்குகிறது. மார்ச் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல்  முடிவடைகிறது. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28 ஆம் தேதி நடைபெறுகிறது, மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாளாகும். அரசியல் கட்சிகள் ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை வரை பிரச்சாரம் செய்யலாம்.

இந்நிலையில்,  நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து, அதிகாரிகள் தேர்தல் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டில் உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். முதல்கட்ட பணிகளாக அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் அனைத்தும் மறைக்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்பான சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படுகின்றன. 

தேர்தல் நடத்தை விதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 

தேர்தல் சமயத்தில் வதந்தி அல்லது பொய் செய்திகள் பரப்பவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும், தேர்தல் தொடர்பான போலி செய்திகளை நீக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மத்திய, மாநில அரசுகளால் புதிய திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாது. மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது.

தனிப்பட்ட வாழ்க்கை, சாதி, மதத்தை வைத்து பரப்புரையில் ஈடுபடக்கூடாது.

 50% வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணையவழியில் நேரலை செய்யப்படும். 

தலைவர்களின் தனி விமானங்கள் அவர்களது வாகனங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படும்.

மதுபான ஆலைகளின் உற்பத்தி மற்றும் விற்பனை கண்காணிக்கப்படும்.

லைசென்ஸ் பெற்று வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தேர்தல் முடியும் வரை ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது

நட்சத்திர பேச்சாளர்கள் நாகரிக முறையில் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்

அரசியல் கட்சியினர் மற்றும் தனிநபர்கள் அனுமதி பெறாமல் கட்சி கொடி, பேனர்களை வீடுகளுக்கு முன் வைக்க முடியாது. 

வங்கிகள் சூரியன் மறைந்ததற்கு பின்பு, அதாவது மாலை 6 மணிக்கு மேல் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது 

ஜாதி மத ரீதியான பிரச்சாரங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாது, தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்துக்கள் கூடாது, ஆன்லைன் பரிவர்த்தனைகள் முற்றிலும் கண்காணிக்கப்படும் என தெரிவித்திருக்கும் இந்திய தேர்தல் ஆணையம்நட்சத்திர பேச்சாளர்கள் நாகரிக முறையில் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like