1. Home
  2. தமிழ்நாடு

முதலமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்த எம்.எல்.ஏ..!

1

 திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.

"நிர்வாக வசதிகளை மேம்படுத்திட புதிய மாவட்டங்கள் அமைக்கப்பட உயர்மட்டக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெரிய பேரூராட்சிகளைப் பிரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும்," என திமுக 2021 சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி வழங்கியது.

திமுக ஆட்சி அமைந்த பின்னர் இதுகுறித்து சில முன்னெடுப்புகள் இருந்தது. 2023ல் சட்டப்பேரவையில், தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

அப்போதே கோவை மாவட்டத்திலிருந்து பொள்ளாச்சியை பிரித்து அதை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பேசப்பட்டதாக தகவல்கள் வந்தது. ஆனால் இதுபற்றி பெரும் நகர்வுகள் ஏற்படவில்லை.

"வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மடத்துக்குளம், உடுமலை தாலுகாக்களை உள்ளடக்கி, புதிய பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதனால், வால்பாறை பகுதி மக்கள் மட்டுமின்றி மடத்துக்குளம், திருமூர்த்தி நகர், தளி, உடுமலை, ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு பகுதி மக்கள் பெரிதும் பயன் பெறுவர்," என பொள்ளாச்சி மக்கள் சார்பில் 'முதல்வரின் முகவரி' துறைக்கு மக்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் மனுக்கள் அனுப்பி வைத்தனர்.

"மாவட்டம் அமைத்த பின், ஒட்டுமொத்த பொள்ளாச்சி மக்களுக்கும் உயர் மருத்துவ வசதி, உயர்கல்வி, நீதித்துறை, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு, விளையாட்டுத்துறை என பல்வேறு வசதிகளும் கிடைக்கும்.மாவட்டம் அமைய, 40 ஆண்டுகளாக தொடர்ந்து போராடுகின்றனர். பொள்ளாச்சி பகுதியில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் கனவை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்," என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், வரும் 2025 பட்ஜெட்டில் கொங்கு மண்டலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நேற்று முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார். 

அப்போது, கோவையிலிருந்து பொள்ளாச்சியை பிரித்து அதை தலைநகரமாகக் கொண்ட ஒரு தனி மாவட்டத்தை உருவாக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. அதை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் மார்ச் 14ல் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் 2021ல் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட். எனவே பொள்ளாச்சியை தனி மாவட்டமாக இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

ஈஸ்வரன் எம்.எல்.ஏ. முதலமைச்சரிடம் முன்வைத்த பிற கோரிக்கைகள் பற்றி பேசுகையில், அவர் கூறியது :-

சேலம், நாமக்கல் மாவட்டங்கள் பயன் பெறுகின்ற திருமணிமுத்தாறு திட்டம், கொங்கு மண்டலம் முழுதுமே பயன் பெறுகிற பாண்டியாறு – பொன்னம்புழா திட்டம், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் என்று நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றி தர வேண்டுமென்று கேட்டிருக்கின்றோம்.

அதேபோல அவிநாசி-அத்திக்கடவு திட்டத்திற்கு காலிங்கராயன் பெயரையும் சேர்த்து வைக்கவேண்டும். அதுதான் காரணப்பெயராக இருக்கும் என்று அந்த கோரிக்கையையும் முதலமைச்சரிடம் வைத்து வந்திருக்கின்றேன்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கு மாற்று பாதை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், நாமக்கல் மாவட்டம் கபிலர் மலையில் ஒரு தீயணைப்பு நிலையம் தேவை என்கிற கோரிக்கையும், நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையில் ஒரு காவல் நிலைய வேண்டும் என்ற முதலமைச்சர் இடம் வைத்து வந்திருக்கிறேன்.

இந்த கோரிக்கைகளை இந்த நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றித் தர வேண்டும் என்ற வேண்டுதலோடு பேசி வந்திருக்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like