1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் கடும் போராட்டம் வெடிக்கும்! எம்எல்ஏ அபு பக்கர் எச்சரிக்கை  !

தமிழகத்தில் கடும் போராட்டம் வெடிக்கும்! எம்எல்ஏ அபு பக்கர் எச்சரிக்கை  !


"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை ஆளுநர் தள்ளிப்போடுவது அந்த தீர்மானத்தை நிராகரிப்பதற்கு சமம்" என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அபுபக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கீதா ஓட்டலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மீராசா தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் காயல் மகபூப் மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம், மக்கீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மஹ்மூதுல் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவருமான அபுபக்கர் எம்எல்ஏ கலந்துகொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் 2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் பேசினார்.‌

கூட்டத்தில் திருநெல்வேலி, திருச்செந்தூர் பயணியர் ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களின் நலன் கருதி ஆளுநரை துணிவாக எதிர்க்கும் தைரியம் அதிமுக ஆட்சியாளர்களிடம் இல்லை.

ஆளுநர் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்யும்போது அமைச்சர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, திமுகவினர் போராட்டம் நடத்தியதால் ஆளுநர் ஆய்வு நிறுத்தப்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு தீர்மானத்துக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. இந்த மசோதாவை ஆரப் போடுவது தீர்மானத்தை நிராகரிப்பதற்கு சமமாக கருத வேண்டும் என்றார்.

Trending News

Latest News

You May Like