மு.க.தமிழரசு ஹாஸ்பிடலில் அனுமதி..!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமானவர் மு.க.தமிழரசு. இவர் திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. கடந்த தேர்தலில் போது உதயநிதி ஸ்டாலினுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாடாளுமன்றத் தேர்தலின்போது தயாநிதி மாறனுக்காக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
முக தமிழரசின் மகன் தான் நடிகர் அருள்நிதி. சென்னையில் வசித்து வரும் மு.க.தமிழரசுக்கு உடல் நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக அவர் சிகிச்சையில் உள்ளார்.
.png)