1. Home
  2. தமிழ்நாடு

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும் வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது - மு.க.ஸ்டாலின்..!

1

கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்பொருட்களைப் பார்வையிடுவதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருகின்றனர்.

மேற்படி பார்வையாளர்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்பொருட்களைப் பார்வையிடுவதற்கு அதிக நேரம் எடுப்பதால், அவர்களால் முழுமையாக அவற்றைப் பார்க்க இயலவில்லை. எனவே, பார்வையாளர்களின் பார்வையிடும் நேரத்தை வார இறுதி நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அதிகரித்து தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கீழடி அருங்காட்சியகத்திற்கு செவ்வாய்க்கிழமை வார விடுமுறையாகஅறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், கீழடி அருங்காட்சியகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்

· திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது கீழடி அருங்காட்சியகம்.

· வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டு வியப்பதை இன்று திடீர் ஆய்வுக்காக அங்குச் சென்றபோது அறிந்துகொண்டேன்.

· கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும் வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது.

· பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பரிலேயே மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளது.

· கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றுமொரு அருங்காட்சியகம் எழுந்து வருகிறது.

· பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கிவிட்டன.

நிலத்திலும், நீரிலும், இலக்கியத்திலும் ஆய்ந்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நிலத்திலிருந்து தொடங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்து வருகிறது நமது திராவிட மாடல் அரசு என அதில் பதிவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like