குடியரசுத் தலைவரை வரவேற்றார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் இன்று நடைபெறும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார். இதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார்.
சென்னை வந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாலை மார்க்கமாக கிண்டியில் கவர்னர் மாளிகைக்கு சென்றார். ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று காலை 10 மணிக்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியான செய்திக்குறிப்பில், “ இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வருகை தந்த மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை சென்னை விமான நிலையத்தில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் "மணிமேகலை" காப்பியத்தின் ஆங்கில பதிப்பு புத்தகம் வழங்கி வரவேற்றார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Delighted to welcome our Hon'ble President @rashtrapatibhvn Tmt Droupadi Murmu to our warm and hospitable Tamil Nadu. Presented the English Translation of the Tamil Epic Manimekalai, reflecting the profound virtue of feeding as "One who gives food is one who gives life." pic.twitter.com/nDtISUkwNf
— M.K.Stalin (@mkstalin) October 26, 2023