1. Home
  2. தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் இன்று செங்கை வருகை..!

1

தமிழக முதல்வரின் செங்கை வருகை அட்டவணைப்படி, இன்று (மார்ச் 10-ம் தேதி) காலை 10.00 மணி பையனூர் சிப்காட்டில் கோத்ரேஜ் ஆலையை திறந்து வைக்கிறார். நெம்மேலி லீலாவதி திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மறுநாள் 11ம் தேதி திருக்கழுகுன்றத்தில் ரோடு ஷோ - மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதேபோல் ராட்டின கிணறு சந்திப்பு மேம்பாலம் கீழ்பகுதி முதல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை திருமணி சந்திப்பு வரை ரோடு ஷோ மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னர் 10 மணி அளவில் ஆட்சியர் அலுவலகம் அருகே திறந்த வெளி மேடையில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட 25 துறைகளில், 47,749 பேருக்கு ரூ.389.53 கோடி மதிப்பில் பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதற்காக ஏற்பாடுகள் திவீரமாக நடைபெற்று வருகின்றன. அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஆட்சியர் அருண்ராஜ் ஆகியோர் பணிகளை கவனித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like