பசும்பொன் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்!
தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113-வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள, முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், மதுரை கோரிப்பாளைத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதே போன்று, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கும் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகரம் மற்றும் புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.