1. Home
  2. தமிழ்நாடு

இது எனக்கு மனதுக்கு பிடித்த திட்டம் - 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி..!

Q

இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி இது என்று 'முதல்-அமைச்சரின் தாயுமானவர்' திட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த வீடியோவில், “வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை 34,809 நியாய விலைக் கடைகளில் செயல்படுத்தப்போகிறோம்.
70 வயதுக்கு மேற்பட்ட 20,42,657 மூத்த குடிமக்கள், 1,27,797 மாற்றுத் திறனாளிகள் என 21,70,454 பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடையப் போகிறார்கள். இது எனக்கு மனதுக்கு பிடித்த திட்டம். ஒரு திட்டத்தை அறிவித்த உடன் கடமை முடிந்து விட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. அந்த திட்டத்தின் பலன் கடைக்கோடியில் இருக்கும் கடைசி மனிதனையும் சென்று சேர்கிறதா என்பதையும் கண்காணிக்கிறோம்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like