1. Home
  2. தமிழ்நாடு

காணாமல் போன மாவட்ட காங்கிரஸ் தலைவர் சடலமாக மீட்பு...!

1

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்  கேபிகே ஜெயக்குமார்.  இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என அவருடைய மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார்.

மாயமானதாக சொல்லப்பட்ட நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த தகவலால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மே 2ம் தேதி இரவு  7.45 மணிக்கு வீட்டில் இருந்து ஜெயக்குமார் சென்றதாகவும், கடந்த 2 நாட்களாக இன்னும் அவர்  வீடு திரும்பவில்லை எனவும் புகாரில் தெரிவித்துள்ளார். அதில் காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடிக்க வேண்டும்.  கேபி ஜெயக்குமார் மகன் அளித்த புகாரின் பேரில் உவரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதற்கு முன்னதாக ஏப்ரல் 30ம் தேதி ஜெயக்குமார் தன்னுடைய வீட்டிற்கு முன்பு சிலர் நோட்டமிட்டு கொண்டு இருந்தனர். அவர்கள் திருட வந்தவர்கள் என நினைத்து எச்சரிக்கையுடன் இருந்தோம்.

ஆனால். தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அதற்காக  அவர்கள் வீட்டைச் சுற்றி சுற்றி வருவதாகவும் சிலரின் பெயர்களை மாவட்ட எஸ்.பி. க்கு புகார் அனுப்பியுள்ளார். இந்நிலையில் தான்   கேபிகே ஜெயக்குமாரை 2 நாட்களாக காணவில்லை என அவருடைய மகன் கருத்தையா   புகார் அளித்துள்ளார். இச்சம்பவம்  நெல்லை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News

Latest News

You May Like