1. Home
  2. தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' பட நடிகர்..!

1

தெலுங்கு திரையுலகில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நவீன் பொலிஷெட்டி.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் நவீன் பொலிஷெட்டி. அடிப்படையில் கட்டட பொறியாளரான இவர் லண்டனில் பணி செய்துவந்தார். இருந்தாலும் நடிப்பு மீது ஆர்வம் உடைய நவீன் லண்டனில் தான் பார்த்த வேலையை உதறிவிட்டு மும்பைக்கு வந்து வாடகை வீட்டில் வசிக்க தொடங்கினார்.பெற்றோரின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து சினிமாவில் நடிக்க சான்ஸ் தேடிவந்தார்.

தொடர்ந்து தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்துகொண்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். மேலும் யூட்யூப்களில் மோனோ ஆக்டிங் வீடியோக்களையும் போட்டுக்கொண்டிருந்தார். அப்படி அவரது சில வீடியோக்கள் 50 மில்லியன் பார்வைகளை கடந்தது. அதேபோல் அவரது விடாமுயற்சிக்கு பலனாக திரையுலக கதவு திறந்தது.

இந்நிலையில் அனுஷ்கா நடித்த 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நவீன் பொலிஷெட்டி விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் நவீன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பைக்கிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதன் காரணாக அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Trending News

Latest News

You May Like