1. Home
  2. தமிழ்நாடு

களைகட்டிய மிஸ் கூவாகம் திருவிழா : திருநங்கை ரியா முதலிடம்..! ​​​​​​​

1

உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்று தனியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் சித்திரை மாத திருவிழாவில், தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான திருநங்கைகளும் ஒன்று கூடுகின்றனர்.

கடந்த 9ம் தேதி ’சாகை வார்த்தல்’ நிகழ்ச்சியுடன் சித்திரைத் திருவிழா துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகளின் நலன்களுக்காகவும் அவர்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் மிஸ் கூவாகம் 2024, மிஸ் திருநங்கை 2024 ஆகிய அழகிப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் சென்னை திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் மிஸ் கூவாகம் 2024 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வடசென்னையை சேர்ந்த ஷாம்ஸீ என்பவர் முதல் பரிசை வென்றிருந்தார்.

இதையடுத்து தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில் மிஸ் கூவாகம் 2024 நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இந்த அழகிப் போட்டியில் 27 திருநங்கைகள் பங்கேற்றனர். இறுதிச்சுற்றில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உதவி மருத்துவரான ரியா முதலிடம் பிடித்து அசத்தினார். இரண்டாம் இடத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த நேகா மற்றும் மூன்றாவது இடத்தை சென்னையைச் சேர்ந்த இவாஞ்சலி ஜான் ஆகியோர் பெற்றனர். இதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தூங்கா நகரம் திரைப்படத்தின் இயக்குனர் கௌரவ் நாராயணன் பங்கேற்று திருநங்கைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Trending News

Latest News

You May Like