1. Home
  2. தமிழ்நாடு

பரவும் தவறான தகவல் : அண்ணாமலையுடன் இருப்பவர் நிகிதா இல்லையாம்..!

1

இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நகையை காணவில்லை என புகார் அளித்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அஜித்குமாரின் மரணத்தில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பிரேத பரிசோதனையில் 44 இடங்களில் காயங்கள் மற்றும் சிறைவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட ஐந்து தனி படை காவலர்கள் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளன மேலும் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. 

மேலும் காவலாளி அஜித் குமார் மீது பத்து சவரன் நகை திருடிவிட்டதாக மதுரையை சேர்ந்த பேராசிரியர் நிகிதா என்பவர் கொடுத்த புகார் எந்த அளவுக்கு உண்மையானது என்று கேள்விகள் தற்போது அனைவரது மத்தியிலும் எழ ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட வழக்கு மற்றும் கல்லூரியில் மாணவிகளை தகாத வார்த்தையில் பேசியது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது தற்பொழுது அம்பலமாகியுள்ளது.எந்த நிலையில் பேராசிரியர் நிகிதாவின் முன்னாள் கணவர் விஜய் திருமாறன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார் அதில் கடந்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து முதல் இரவு அன்று நாகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக தன்னுடைய ஆதங்கத்தை குறிப்பிட்டு இருந்தார்

தொடர்ந்து பேராசிரியர் நிகிதா மீது அடுக்கடுக்கான மோசடி புகார்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தற்பொழுது அண்ணாமலையுடன் இருப்பவர் நிகிதா இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலான புகைப்படம் நிகிதா இல்லை அவர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக செயலாளர் ராஜினி என்பது தெரிய வந்துள்ளது. 


 


 

Trending News

Latest News

You May Like