1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சரின் சர்ச்சை பேச்சு..! நடிகர்கள் அரசியலுக்கு வருவாங்க.. ஆனால், அறிவே இருக்காது..!

1

சென்னையில் நடந்த திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாமில் பேசிய ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:-

வரும் காலங்களில் சீமான் போன்ற நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவார்கள். நடிகர்களை திரைப்படங்களில் பார்க்கலாம், ரசிக்கலாம். அத்துடன் வந்துவிட வேண்டும். நடிகர்களுக்கு அறிவு இருக்குமா என்றால் இருக்காது. கட்சி நடத்துவது என்றால் சாதாரணமா? தமிழகத்தில் ஒரு சின்ன சந்து இருந்தால் கூட அதில் இரண்டு குடும்பங்கள் திமுகவைச் சேர்ந்தவர்களாக இருப்பர். திமுக இல்லாத ஊர் கிடையாது, பலமாக இருக்கிறோம். இவ்வளவு பெரிய கட்சியான நாமே 10 வருடங்கள் எதிர்க்கட்சியாக இருந்தோம்.

நடிகர்கள் செல்லும்போது கூட்டம் கூடுகிறது அல்லவா.. அதனை பார்த்து மகிழ்ச்சியடைந்து அடுத்த முதல்வர் தான் தான் என்று அரசியலுக்கு வந்துவிடுகிறார்கள்? நடிகர்கள் அரசியலுக்கு வந்து வெற்றிபெறுவது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது. இனிமேல் நடிகர்கள் அரசியலுக்கு வந்து எடுபட முடியாது. நடிகர்களின் கனவுகளை பொய்யாக்க வேண்டும் என்றால், யாருடைய தயவும் இல்லாமல் வெற்றிபெற நாம் அமைப்பு ரீதியாக பலமாக வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால் யார் தயவும் நமக்கு தேவையில்லை. எந்தத் தேர்தல் வந்தாலும் மிகப்பெரிய வெற்றியை திமுக பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like