1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் அமைச்சர் உதயநிதி திறந்து வைப்பார்..!

1

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புத்தகப் பிரியர்களுக்காக புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புத்தகக்காட்சி ஜனவரி 3ம் தேதி தொடங்கி ஜனவரி 21ம் தேதி நடைபெறவுள்ளது. 1000 அரங்குகளில் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகள் பொதுமக்கள் மற்றும் புத்தக பிரியர்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும். விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் இடம் பெறுகிறது.புத்தகக் காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சி இன்று தொடங்க உள்ளது.புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் 3 மணிக்கு துவங்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கி விழாப் பேருரை ஆற்றுகிறார்.

 

Trending News

Latest News

You May Like