1. Home
  2. தமிழ்நாடு

இன்று காஞ்சிபுரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

1

தி.மு.க. இளைஞரணி செயலாளரும்,  அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இண்டியா  கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். விருதுநகர் காரியாபட்டியில் பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருப்புக்கோட்டை, மதுரை திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய ஊர்களுக்கு சென்று தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

தேனி, திண்டுக்கல், மதுரையில் நேற்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அதை  தொடர்ந்து விமானம் மூலம்  சென்னை திரும்பிய அவர் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் சென்று தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து  காஞ்சிபுரம் பெரியார் தூண் காந்தி சாலையில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்கிறார். 

அதன்பிறகு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதிக்குட்பட்ட செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய ஊர்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இறுதியாக திருவண்ணாமலை கீழ் பெண்ணாத்தூர் பஸ் நிலையம் அருகே பிரச்சாரம் செய்கிறார். 

Trending News

Latest News

You May Like