1. Home
  2. தமிழ்நாடு

விக்கிரவாண்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்..!

1

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து காலியாக இருந்த விக்கிரவாண்டி சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வரும் ஜூலை 10-ம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்தது. இதனால், இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியினரிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.

இந்நிலையில், திமுக வேட்பாளரை ஆதரித்து தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அன்னியூர் சிவாவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அன்னியூர் சிவாவை குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்து முதல்வர் செய்து கொண்டு இருக்கிறார். ஆட்சிக்கு வந்தது தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தார்.

அதேபோல ஆவின் பால் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அதேபோல விடியல் பயணம் திட்டத்தை செயல்படுத்தினார். புதுமை பெண் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் மட்டும் 60 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற்றுள்ளார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக நம்முடைய முதல்வர் அறிமுகப்படுத்திய திட்டம் காலை உணவு திட்டம். முன்பு பெற்றோர்கள் பள்ளிக்கூடத்திற்கு வெறும் வயிற்றில் குழந்தையை அனுப்பிவிட்டு பிள்ளைகளையே நினைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இன்று குழந்தைகளை வாழ்த்தி அனுப்புகிறார்கள். ஏனெனில் அந்த குழந்தைக்கு கல்வி கற்றுக்கொடுக்கவும் உணவு கொடுக்கவும் நமது முதல்வர் இருக்கிறார்... திராவிட மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையோடு அனுப்புகிறார்கள். இப்படி பட்ட திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும் என்றால் திராவிட மாடல் ஆட்சியை வாழ்த்தி வரவேற்று அன்னியூர் சிவாவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த்து சட்டமன்றத்திற்கு அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

Trending News

Latest News

You May Like