1. Home
  2. தமிழ்நாடு

மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால்தான் திமுகவிற்கு உடன்பாடு இல்லை - அமைச்சர் உதயநிதி..!

1

சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாடு வருகிற 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,

'சேலம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. 3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.  ராமர் கோவில் திறப்பிற்கோ, அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால்தான் திமுகவிற்கு உடன்பாடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like