1. Home
  2. தமிழ்நாடு

3,238 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்புகள் : அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்

1

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னையில் 9 இடங்களில் 3,238 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. அதன்படி நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை திட்டப் பகுதியில் ரூ. 75.95 கோடி மதிப்பீட்டில் 450 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பெரியார் நகர் திட்டப் பகுதியில் ரூ. 81.64 கோடி மதிப்பீட்டில் 448 புதிய குடியிருப்புகள், காந்தி நகர் திட்டப் பகுதியில் ரூ. 83.50 கோடி மதிப்பீட்டில் 500 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், வேம்புலியம்மன் திட்டப் பகுதியில் ரூ. 32.62 கோடி மதிப்பீட்டில் 188 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பத்ரிக்கரை திட்டப் பகுதியில் ரூ. 32.30 கோடி மதிப்பீட்டில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கங்கைகரைபுரம் திட்டப் பகுதியில் ரூ. 29.85 கோடி மதிப்பீட்டில் 170 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ஆண்டி மான்யம் தோட்டம் திட்டப் பகுதியில் ரூ. 118.53 கோடி மதிப்பீட்டில் 702 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், நாட்டான் தோட்டம் திட்டப் பகுதியில் ரூ. 41.08 கோடி மதிப்பீட்டில் 252 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பருவா நகர் திட்டப் பகுதியில் ரூ. 61.13 கோடி மதிப்பீட்டில் 360 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என ரூ. 556.60 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 3,238 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர் அபூர்வா, வாரிய மேலாண்மை இயக்குனர் பொ. சங்கர், மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சிற்றரசு, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Trending News

Latest News

You May Like