1. Home
  2. தமிழ்நாடு

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆதரவாக அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்..!

1

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்குக் குறைவாகவே இருப்பதால் தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

கதிர் ஆனந்த் கட்சி பணி மற்றும் மக்கள் பணி இரண்டிலும் சிறப்பான வகையில் செயல்பட்டதாலேயே மீண்டும் ஒருமுறை கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

தொகுதிக்காக கதிர் ஆனந்த் செய்த பணிகள் திட்டங்கள் பற்றி பார்ப்போம். அதன்படி அவரின் முக்கிய செயல்பாடு என எடுத்துக் கொண்டால், எம்.பி. தொகுதி நிதியிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு சத்துவாச்சாரி சுரங்கப்பாதை கொண்டு வந்தது,வேலூர் விமான நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது தொடர்பாக மக்களவையில் குரல் கொடுத்தது போன்றவை மிக முக்கியமானவையாகும். வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் அளப்பரிய பங்கு கதிர் ஆனந்துக்கு உள்ளது என கூறினால் அது மிகையாகாது.வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும் மக்களுக்கு தேவையான விஷயத்தை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தீர்த்து வைத்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று  வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆதரவாக அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்தார்.

1

அந்த பிரச்சாரத்தின் போது ’நான் கதிர் ஆனந்த் அவர்களின் ஜூனியர். பள்ளி கல்லூரிகள் மட்டுமல்ல, அரசியலிலும் நான் அவருக்கு ஜூனியர். எனவே நான் ஒரு அமைச்சராகவோ, எம்எல்ஏ ஆக வோ, இளைஞர் அணி தலைவராகவோ இங்கு வாக்கு கேட்க வரவில்லை. கதிர் ஆனந்தின் நண்பராக வாக்கு கேட்டு வந்துள்ளேன் என்று கூறினார்.

மேலும் கடந்த முறை வேலூர் தொகுதி மக்கள் மிகவும் சோதித்து விட்டீர்கள். மற்ற தொகுதிகளில் எல்லாம் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைத்த நிலையில் வேலூரில் மட்டும் வெறும் 8000 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. ஆனால் இந்த முறை 2 லட்சம் அல்லது 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கதிர் ஆனந்த் எதிராக நிற்கும் வேட்பாளர்கள் அனைவருக்கும் டெபாசிட் இழக்க வேண்டும், அந்த அளவுக்கு நீங்கள் வாக்குகளை அவருக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like