1. Home
  2. தமிழ்நாடு

காலாவதியான மாநகரப் பேருந்துகள் மாற்றப்படாமல் இருக்க கொரோனா தான் காரணம் - அமைச்சர் சிவசங்கர்.

1

தமிழகம் முழுவதும் காலாவதியான பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செவ்வாயன்று, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, உடைந்துபோன பழைய பேருந்துகள் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் போதிய பராமரிப்பில்லாமல், பயணிகளின் உயிர்களை பலிவாங்கக் காத்திருப்பதாகக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் சிவசங்கர், புதிதாக 7,682 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் பல்வேறு நிலைகளில் உள்ளது. அனைத்தும் முடிவடைந்து 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் புதிய பேருந்துகள் சாலையில் ஓடும். ஒவ்வொரு மாதமும் 300 புதிய பேருந்துகள் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சேர்க்கப்படும். கூடுதலாக மின்சாரத்தில் இயங்கும் 1000 பேருந்துகளை சென்னையில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த ஆறு ஆண்டுகள் பழமையான 1,500 பேருந்துகள், தற்போது சீரமைப்புப் பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவை சீரமைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்படும் என்றும் சிவசங்கர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like