அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10-வது முறையாக நீட்டிப்பு..!

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார். அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 22-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில உள்ள அவணங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான மனு குறித்து அமலாக்கத்த துறை பதிலளிக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.