1. Home
  2. தமிழ்நாடு

நவம்பர் 11 வரை பள்ளிகள் திறக்கப்படாதா? அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

நவம்பர் 11 வரை பள்ளிகள் திறக்கப்படாதா? அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கொடிய கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இருப்பினும் கல்வி நிறுவனங்கள் திறக்க தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை..தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் 10-ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுத உள்ளதால், அது தொடர்பாக தேதியை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டியுள்ளது.

மத்திய அரசு நாடு முழுவதும் முறையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகளைத் திறந்துகொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் சில மாநிலங்களில் அக்டோபர் 15-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.எனினும் தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என நவம்பர் 11-ம் தேதிக்குள் அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

நவம்பர் 11 வரை பள்ளிகள் திறக்கப்படாதா? அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

இந்த ஆலோசனையில், பொதுத் தேர்வு தேதியை நிர்ணயித்தல், 40 சதவீத பாடக் குறைப்பு, பள்ளிகள் திறப்பு தேதியை முடிவு செய்தல், இரண்டாம் பருவ புத்தகம் வழங்குதல், 'நீட்' தேர்வில், அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண்களை ஆய்வு செய்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார், இயக்குனர் கண்ணப்பன், ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

Trending News

Latest News

You May Like