பயணிகளுக்கு இடைஞ்சலாக உள்ள சுவரை இடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவு..!

தென் மாவட்ட மக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை என்றும் சர்வீஸ் சாலையை பயன்படுத்துவதால் அந்த பகுதி மக்கள் சிரமப்படுவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடைஞ்சலாக உள்ள சுவரை இடிக்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார். கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு சில நாட்களில் இந்த சுவர் இடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.