1. Home
  2. தமிழ்நாடு

விஜய் யாருடைய பி டீம் என்பது போக போகத் தெரியும் - அமைச்சர் சேகர்பாபு..!

1

திராவிட மாடல் என்று சொல்லி தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி மக்களாட்சியை மன்னராட்சி போல் நடத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டினார் தவெக தலைவர் விஜய்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது என்றும் செயலிலும் ஆட்சியிலும் அதை காட்ட வேண்டும் என்றும் விமர்சித்த விஜய், “திமுகவின் சீக்ரெட் ஓனர் பாஜக. வரும் தேர்தலில் இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக” என்று குறிப்பிட்டு இருந்தார்.


இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கோ.வி.செழியன், “திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரியும். கொள்கையில் உறுதியாக இருக்கும் இயக்கம் திமுக. முன்பக்கம் எதிர்த்துவிட்டு, பின்பக்கம் ஆதரிப்பது என்ற இரட்டை நிலை திமுகவுக்கு என்றைக்கு வந்தது கிடையாது.


திமுகவின் வரலாறு தெரியாமல் சீக்ரெட் ஓனர் என்ற கருத்தை தவெக தலைவர் விஜய் கருத்தை சொல்லியுள்ளார். அது விளையாட்டுத் தனமான திமுகவின் வரலாறு புரியாமல் பேசும் தலைவரின் கருத்து என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “மக்களால் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டு, அதன் மூலம் திமுக ஆட்சி அமைத்துள்ளது. திமுக ஒன்றும் மடம் அல்ல. திமுகவுக்கு எதிர் யார் என்றுதான் எங்களின் எதிரிகள் போட்டிப் போட்டுக் கொண்டுள்ளனர். நிரந்தமான ஆளுங்கட்சி என்ற நிலை தான் திமுகக்கு உள்ளது. 2வது இடம் யார் என்பதற்கு தான் எதிர்கட்சிகளிடையே போட்டி” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “பிறந்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகாமல் தவழ்ந்து வரும் குழந்தைக்கும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்ற திமுகவுக்கும் போட்டியா? எங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை. விஜய் யாருடைய பி டீம் என்பது போக போகத் தெரியும்” என்று குறிப்பிட்டார். 

Trending News

Latest News

You May Like