மாநாட்டு மைக்கில் உதவியாளரை தரக்குறைவாக திட்டிய அமைச்சர்..! எருமை மாடாடா நீ?
வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி தஞ்சையில் தொடங்கியது. இதில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பங்கேற்றார். அப்போது மாநாட்டில் பேசுவதற்கு வந்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மாநாட்டு மேடையில் மைக் முன்பாக நின்று பேச தொடங்கினார்.
அப்போது தான் பேசுவதற்கான குறிப்பு இல்லாததை கண்டு கோபமடைந்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனது உதவியாளரான பரசுராமன் எங்கே என கேட்டு டென்ஷன் ஆனார். அமைச்சர் அழைத்ததும் குறிப்புடன் ஓடி வந்த உதவியாளர் பரசுராமனை, எருமை மாடாடா நீ என தகாத வார்த்தையால் திட்டினார்.
மேலும் உதவியாளர் கொடுத்த பேப்பரையும் மேடையிலேயே தூக்கி வீசினார் அமைச்ச எம்ஆர்கே பன்னீர்செல்வம். அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் இந்த செயல் மாநாட்டு மேடையில் கூடியிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொது இடத்தில் தன் உதவியாளரை தரக்குறைவாக திட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்#MRKPanneerselvam | #DMK pic.twitter.com/AuXXrdU8IR
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) January 3, 2025