1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சர் பொன்முடி சொத்துக்குவித்தது உறுதி.. 21ல் தண்டனை..!

1

வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் வேலூர் நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து, கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து, மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அமைச்சர் பொன்முடியின் விடுதலையை ரத்து செய்து உத்தரவிட்டார். பொன்முடி 64.90 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாக கூறினார்.தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வரும் டிசம்பர்  21ம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்  நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்

தண்டனை விவரங்களை வருகிற 21-ந்தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார். அன்றைய தினம் பொன்முடி, விசாலாட்சி அகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் என்ன தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Trending News

Latest News

You May Like