1. Home
  2. தமிழ்நாடு

எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்..!

1

இன்றைய தேதியில் சுமார் 2,600 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றும், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் என்று ஆயிரக்கணக்கான மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் செய்திகள் தெரிய வருகிறது. மேலும், பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பதவியை நியமிக்க இயலவில்லை எனில் மருத்துவக் கல்லூரிகளை திறப்பது ஏன் ? என்று ஒரு வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே, உடனடியாக திமுக அரசு தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

சென்னை எழும்பூர் மண்டல அரசு கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசினர் கண் மருத்துவமனையில் 39 ஆவது கண் தான இருவார விழா மற்றும் கண்தானம் செய்த நல்ல உள்ளங்களை சிறப்பிக்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உறுப்பு தானத்தில் தொடர்ந்து தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது. உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து இதுவரை 249 பேர் உடலுறுப்பு தானம் செய்துள்ளனர். மேலும், ஒரு துறையில் என்ன நடக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதால் 116 மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஒருவர் மன உளைச்சல் காரணமாக உயிரிழந்தார்.

எந்த ஆட்சியிலும் இப்படி நடந்தது கிடையாது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில்தான் இதுபோன்றுநடைபெற்றது. கடந்த ஆட்சியில் பணி ஆணை பெறுபவர்களிடம் விருப்ப கலந்தாய்வு அ.தி.மு.க. ஆட்சியில் நடத்தப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் மருத்துவர்களுக்கு எந்த பகுதியில் பணி வேண்டும் என்று கேட்டு அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி வருகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் 6,744 மருத்துவத் துறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 36,000 பேருக்கு அவர்கள் விருப்பப்பட்ட இடத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவத்துறை‌ பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் விவரங்களை, கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் அளித்த விவரங்களை எடப்பாடி பழனிசாமி வெளியிட வேண்டும். அவர் ஆட்சி காலத்தில் அவரும் அமைச்சர்களும் எந்தெந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள் என்ற விவரங்களையும் வெளியிட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like