செய்தியாளர்களுக்கு இலவசமாக உடல் முழு பரிசோதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தீபாவளி விழா சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒய் எம் சி ஏ அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கிரிராஜன், ஆடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் ராஜா, தொழிலதிபர் சார்லஸ் வசந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், டிசம்பர் மாதத்திற்குள் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக செய்தியாளர்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.