பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியம் மரியாதை..!
குன்னூர் பேருந்து விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியம், “குன்னூர் விபத்தில் காயமடைந்த 32 பேர் குன்னூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விரைவில் அவர்களை சொந்த ஊருக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படும். உதகை மருத்துவ கல்லூரியில் இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அதே போன்று கோவையில் இருவர் சிகிச்சை பொற்று வருகின்றனர் அதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசின் நிவாரண தொகையை அவர்களின் உறவினர்களிடம் வழங்கப்படும். விபத்தில் காயமடைந்தவர்கள் பதட்டத்துடன் உள்ளதால் அவர்களுக்கு தேவையான மன நல சிகிச்சை அளித்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளோம்” என்றார்.
விபத்தில் உயிரிழந்த ஒன்பது உடல்களை 11 அமரர் ஊர்தி மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். முதலமைச்சர் உத்தரவின்படி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் விபத்தில் சிக்கி குன்னூர் லாலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி 32 நபர்களுக்கு தலா ரூ.50,000 காசோலை வழங்கினார். மேலும் படுகாயம் அடைந்து கோவை மற்றும் உதகையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு தல 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.